விஜய்க்கு மட்டுமே படம் பண்ணுவேன்: அட்லி

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் சற்றுமுன் இயக்குனர் அட்லி பேசியதாவது:
நான் ஒவ்வொரு முறை ஒரு கதையை தேர்வு செய்து எழுதும் போது அந்த கதையின் நாயகனாக என் கண்முன்னே வருவது தளபதி விஜய் மட்டுமே. இந்தியாவின் சிறந்த டான்ஸர் மற்றும் மிகப் பெரிய ஸ்டாரான தளபதியுடன் பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறேன் 
மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் நான் மீண்டும் விஜய்யுடன் மட்டுமே படம் செய்ய விரும்பினேன். எங்க அண்ணனுக்கு மட்டும் தான் படம் பண்ணுவேன், இதுதான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம்
‘பிகில்’ திரைப்படம் ’தெறி’யை விட இரண்டு மடங்காகவும் மெர்சல் படத்தை விட மூன்று மடங்காகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும் நான் விஜய் அண்ணாவுடன் எந்தவித வாக்குவாதமும் செய்ய மாட்டேன். அவர் கூறும் எந்த விஷயமும் சரியாக இருக்கும் என்பதால் ’எஸ் அண்ணா’ ’ஓகே அண்ணா’ போன்ற பதில்களை மட்டுமே நான் அவரிடம் இதுவரை தெரிவித்துள்ளேன் என்று இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.
எனக்கும் அர்ச்சனா அவர்களுக்கும் நிறைய வாக்குவாதம் வரும். இந்த வாக்குவாதங்கள் ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே வரும் வாக்குவாதம் போன்றது. இதுபோன்ற நேரத்தில் நாங்கள் அப்பா கல்பாதி அகோரம் அவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்று அட்லி இசை வெளியீட்டு விழாவில் பேசினார்
விஜய்க்கு மட்டுமே படம் பண்ணுவேன் என்று அட்லி கூறியிருப்பதால் அட்லியின் அடுத்த படத்திலும் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Comments

Popular Posts