'பிக்பாஸ் 4' தொகுப்பாளர் குறித்த முக்கிய தகவல்!



பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மூன்றாவது வாரம் இந்த சீசனின் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் மற்றும் முகின் ஆகியோர்களில் இன்னும் இரண்டு வாரங்களில் இரண்டு பேர் வெளியேறியவுடன் மீதியுள்ள ஐவரில் ஒருவர் பிக்பாஸ் 3 சீசனின் டைட்டிலை பெறுவார்
இந்த நிலையில் பிக்பாஸ் 4வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சரத்குமார், சூர்யா அல்லது சிம்பு ஆகியோர்களில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் இணைய தளங்களில் செய்திகள் பரவி வந்தது 
இந்த நிலையில் இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘பிக்பாஸ் அடுத்த சீசனிலும் கமலஹாசனே தொகுத்து வருவார் என விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இது வரை நடைபெற்ற 3 சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ள நிலையில் நான்காவது சீசனிலும் அவரே தொகுத்து வழங்குவார் என்றும் அவரைத் தவிர வேறு யாரையும் தொகுப்பாளராக நாங்கள் பேசவில்லை என்றும் விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அடுத்து வரும் இரண்டு சீசனிலும் கமல்ஹாசனை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments

Popular Posts