கல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்.. முன்னணி நடிகை பிடிவாதம்.. குடும்பத்தில் குழப்பம்!
சென்னை: முன்னணி நடிகை ஒருவர் தனக்கு திருமணம் வேண்டாம் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால் அவரின் குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கோலிவுட்டில் பல வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனவர் அந்த ஹீரோயின். முதலில் சிறிய சிறிய படங்களில் நடித்து அதன்பின் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார்.
முன்னணி நடிகர் ஒருவருடன் 2004ல் இவர் நடித்த படம் பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் இருந்தே இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்.
நிறைய ஹிட்
அதன்பின் தமிழில் வரிசையாக நிறைய ஹிட் படங்களில் நடித்தார். இதனால் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது தமிழில் சோலோ படங்களிலும், பெரிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இரண்டு காதல்
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஒருவரை இவர் தீவிரமாக காதலித்து வந்தார். அந்த நடிகரை இவர் திருமணம் செய்து கொள்வார் என்று நிறைய செய்திகள் வந்தது. ஆனால் கடைசியில் அந்த காதல் முறிந்து அந்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.
மீண்டும்
இதையடுத்து வேறு ஒரு தொழில் அதிபரை அந்த நடிகை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்தது. ஆனால் கடைசியில் நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த உறவும் முறிந்தது. இதனால் அந்த நடிகைக்கு திருமணம் மீதான நம்பிக்கையே போய்விட்டதாம்.
தொடர்ந்து தொந்தரவு
அந்த நடிகையை குடும்பத்தினர் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தொந்தரவு செய்து வருகிறார்களாம். ஆனால் எனக்கு திருமணம் வேண்டாம். இப்படியே நான் இருந்து கொள்கிறேன் என்று அந்த நடிகை மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டார் என்கிறார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் தினமும் நிறைய பிரச்சனை நிலவுகிறதாம்.
வயசு என்ன
அந்த நடிகைக்கு வயசு ஆகிக்கொண்டே போகிறது. ஆனால் தனக்கு ஏற்றபடி ஒருவரை இன்னும் அவர் பார்க்கவில்லை. ஆகவே இன்னும் சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த நடிகை உறுதியாக இருக்கிறாராம்!
Comments
Post a Comment