பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நிறைவடைகிறது தெரியுமா.! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் சேரன் கூடி இருந்தது ரசிகர்கள் பலருக்கும் மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நல்ல அனுபவத்தை கொண்டு செல்வதாக சேரன் கூறியிருந்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில்கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே, அதாவது வாரம் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்றுவந்தது. மேலும், இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முகென் அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 6 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 92 நாட்களை நிறைவு செய்ய இருக்கிறது. இன்னும் 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்ற படுவார். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நிறைவடையும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய போகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசன் அடுத்த வாரம் ஞாயிற்று கிழமை நிறைவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே, இந்த சீசன் 105 வது நாளில் நிறைவடைய இருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியும் 105 தான் ஒளிபரப்பாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment