அது நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை!
சென்னை: வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை ஒருவர் இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றால் பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
நல்ல புகழ்பெற்ற படம் மூலம் தமிழில் அந்த நடிகை அறிமுகம் ஆனார். தமிழில் தொடக்கத்தில் வரிசையாக சில நல்ல படங்களை அவர் நடித்து வந்தார்.
ஆனால் போக போக அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீங்க ரொம்ப குடும்ப பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று கூறி அவருக்கு நிறைய வாய்ப்புகள் பறிபோனது.
என்ன செய்தார் \
இதனால் சில வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் புலம்பி வந்த அந்த நடிகை, சில வாரங்களுக்கு முன் இணையத்தில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டார். கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை அவர் இணையத்தில் வெளியிட்டார்.
என்ன சிக்கல்
இந்த நிலையில் அவர் வெளியிடாத புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலானது. மேலாடை இல்லாத அந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலானது. இதை வேறு ஒரு ஐடி இணையத்தில் வெளியிட்டது. இதுதான் சர்ச்சைக்கு காரணம்.
கேள்வி
என்ன மேடம் நீங்க இப்படி போட்டோ போட்டு இருக்கீங்க என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள். நீங்க இப்படி செய்ய கூடாது. உங்க மேல நிறைய மரியாதை வச்சு இருந்தோம் என்று அவர்கள் டிவிட் செய்து கேள்வி கேட்டனர்.
என்ன அதிர்ச்சி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை, அது நான் கிடையாது என்று விளக்கி வருகிறாராம். கடவுளே இருந்த மரியாதையும் போச்சே. சும்மாவே இருந்திருக்கலாமோ என்றும் அவர் புலம்பி வருகிறாராம்.
ஆனால்
ஆனால் அதே சமயம் இந்த நடிகைக்கு அந்த சர்ச்சை போட்டோவிற்கு பின்தான் நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். நிறைய கவர்ச்சியான ரோல்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது என்கிறார்கள்.
Comments
Post a Comment