கேமராவில் சிக்கிய கடிதம்.! தர்ஷனுக்காக மறைத்து மறைத்து அப்படி என்ன எழுதியுள்ளார் ஷெரின்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தர்ஷன், ஷெரின் ரொமான்ஸ்சும் ஒன்று. வகையில் வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் ஷெரின்,, தர்ஷனிடம் நெருக்கமாக பழகி வருவதை ஒருசில போட்டியாளர்கள் காதலாக வர்ணித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் வைத்து போட்டியாளர்கள் கலாய்த்து வந்தனர் . இருப்பினும் இவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக தான் கூறி வருகின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டமஹத் மற்றும் யாஷிகா சிறப்பு விருந்தினர்களாக சென்றிருந்தனர். மேலும் , இவர்கள் உள்ளே சென்று போட்டியாளர்களுக்கு , சில டாஸ்குகளையும் கொடுத்திருந்தனர். அந்த வகையில் ஷெரின் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு கடிதத்தை எழுதலாம் என்றும் அந்த கடிதம் ஒளிபரப்ப படாது என்றும் அவர்கள் அறிவித்தனர்.
Comments
Post a Comment