நடனப்புயல் நடிகருடன் இளம் நடிகைக்கு முற்றிவிட்ட நட்பு
நடனப்புயல் நடிகருடன் அந்த இளம் நடிகைக்கு நட்பு முற்றிவிட்டதாம். அதனால், எந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும், நடிகருடன் நட்பு பாராட்ட, அவர் இருக்கும் இடத்துக்கே பிளைட் டிக்கெட் புக் பண்ண சொல்லி வற்புறுத்துகிறாராம். இதையறிந்த அந்த நடிகரின் இன்னொரு தோழி நடிகை ஆவேசப்படுகிறாராம்.
எங்கே தனது நட்பு பறிபோய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம் என்று, நடிகையை நன்கறிந்த நடிகர் ஒருவர் கமென்ட் அடிக்கிறார். நடிகருடனான இரண்டு நடிகைகளின் நட்பும் கடைசிவரை கானல் நீராகவே இருந்துவிடுமோ என்று, கோலிவுட்டில் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
Comments
Post a Comment