இப்படி நடிச்சா சிக்கல்தான்.. முன்னணி ஹீரோவிற்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை.. அதிர்ச்சி காரணம்!

சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகராக உருவாகிக் கொண்டு இருக்கும் இளம் நடிகர் ஒருவரின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. 

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய புதிய ஹீரோக்கள் அறிமுகமாகி வருகிறார்கள். முன்பு எல்லாம் பெரிய ஹீரோக்கள் படம் மட்டும்தான் ஹிட் ஆகும் என்று காலம் போய் தற்போது இளம் ஹீரோக்களின் படங்களும் ஹிட் ஆக தொடங்கி உள்ளது. 

அப்படி இளம் ஹீரோவாக அறிமுகம் ஆன நடிகர் ஒருவர்தான் தற்போது சிக்கலில் இருக்கிறார். முதலில் இசையமைப்பாளராக இருந்த அவர் பின் நடிகர் ஆனார்.
என்ன சிக்கல்


என்ன சிக்கல் 
நடிகர் ஆன முதல் படம் அவருக்கு ஹிட் கொடுத்தது. அதன்பின் வரிசையாக சில படங்களில் நடித்தார். ஹிட், பிளாப், ஹிட், பிளாப் என்று மாறி மாறி அவர் படங்களை வெளியிட்டுக் கொண்டு இருந்தார். இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை 
இந்த நிலையில்தான் அவர் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்தது. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் அவர் நடிக்கிறார். அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார் என்று செய்திகள் வந்தது.

என்ன சிக்கல்


என்ன சிக்கல் 
இதையடுத்து அவர் அந்த குறிப்பிட்ட நடிகையுடன் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய ஸ்டைல் நடிப்பை அவர் விடவில்லை. வரிசையாக நிறைய நடிகைகளுடன் அவர் அதன்பின் சேர்த்து வைத்து பேசப்பட்டார். சமீபத்தில் கூட சர்ச்சையில் சிக்கினார்

குடும்பம்

குடும்பம் 
இதனால் தற்போது அந்த நடிகரின் குடும்பத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம். அவரின் மனைவிக்கும் அவருக்கு இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம். இனிமேல் இப்படி நடிக்க கூடாது, நல்ல கதையாக நடியுங்கள் என்று அந்த நடிகரின் மனைவி சண்டை போட்டு வருகிறார் என்கிறார்கள்.

Comments

Popular Posts