பெரிய இடத்து ஹீரோவுக்கு ஐஸ் வைக்கும் நடிகை

சென்னை: இளம் நடிகை ஒருவர் பிரபல ஹீரோவை புகழ்ந்து பேசுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

நல்ல அழகும், நடிப்புத் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டும் என்றாலே சில ஹீரோக்களுக்கு லைட்டா பயமாக இருக்கும். காரணம் எவ்வளவு கடினமான ஸ்டெப்ஸாக இருந்தாலும் அம்மணி அசால்டாக ஆடிவிடுவார். அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆட அனைத்து ஹீரோக்களாலும் முடியாது.

Actress tries different tactic to get movie offers

அந்த நடிகையின் மார்க்கெட் தற்போது மந்தமாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் வில்லன் நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த நடிகருக்கு போய் ஜோடியாக நடிக்கிறாரே என்று பரிதாபப்படாத ஆளே இல்லை. அவர்கள் இருவரும் ஜோடியாக திரையில் வந்தால் காமெடியாக இருக்குமே என்பதே நடிகையின் ரசிகர்களின் கவலை.

இந்நிலையில் அம்மணி அக்கட தேசத்து ஹீரோ ஒருவரை நேரம் கிடைக்கும்போது எல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அம்மணிக்கு அந்த ஹீரோ மீது காதலோ என்று பலருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் ஹீரோ காதல் திருமணம் செய்பவர் அல்ல என்பதால் நடிகையின் பேச்சுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று ஆளாளுக்கு யோசித்தனர். 

நடிகர் பெரிய இடம் என்பதால் புகழ்ந்து பேசி அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு பெற நினைக்கிறாராம் நடிகை. அந்த நடிகரின் படங்களில் குச்சி, குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளை தான் நடிக்க வைக்கிறார்கள். இந்நிலையில் அம்மணிக்கு இப்படி ஒரு ஆசை. 

நடிகை தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சைடு பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே நிறைய சம்பாதித்துவிட்டாலும் இன்னும் நிறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் அவர். அதனால் தான் வாய்ப்பை எதிர்பார்த்து அந்த முன்னணி நடிகரை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறாராம்.


Comments

Popular Posts