ரசிகர்கள் மீது கைவைக்க வேண்டாம்: பிகில் விழாவில் விஜய் பேச்சு

விஜய் நடித்த ‘சர்க்கார்’ திரைப்படத்தில் தமிழக அரசு அளித்த இலவச பொருட்கள் குறித்த வசனத்திற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ‘சர்க்கார்’ திரைப்படம் ஓடிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்கள் ஆளுங்கட்சியினர்களால் அடித்து நொறுக்கப்பட்டது தெரிந்ததே. 
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய பின்னர் தற்போது இதுகுறித்து நேற்று நடைபெற்ற ‘பிகில்’ ஆடியோ விழாவில் விஜய் பேசியுள்ளார். ’எனது பேனர் கட் அவுட்களை உடையுங்கள்,  கிழியுங்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்த பேனர்களை கிழிக்கும் போது, ரசிகர்களுக்கு கோபம் வருவது நியாயம் தான். ஆனால் அதற்காக அவர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றுர் விஜய் வேண்டுகோள் விடுத்தார். 
மேலும் அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்றும் ஆனால் விளையாட்டில் அரசியல் செய்யாதீர்கள் என அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் விஜய், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரி ஆகி விடும் என்று பல உள்ளர்த்தங்கள் அடங்கிய ஒரு கருத்தை தெரிவித்தார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து இன்று பதிலடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular Posts