பிக் பாஸ் அறிவித்த பரிசு தொகை.! இன்றே எடுத்துக்கொண்டு வெளியேற சம்மதித்த போட்டியாளர்.!


பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், இந்த போட்டியாளர் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். எனவே, இந்த வாரம் யார் வெளியேற எனவே, என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும், இறுதி போட்டிக்கு யார் நுழைய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இந்த நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமவில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற விருப்பும் நபர்கள் வெளியேறலாம் என்று அறிவித்துள்ளார். அதன் பின்னர் கவின் அதற்கு சம்மதித்து எழுந்து நின்றுள்ளார்.எனவே, கவின் அந்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினாரா இல்லையா என்பதை இன்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவரை நடந்த இரண்டு சீசன்களில் கூட பிக் பாஸ் இது போன்ற சலுகையை அறிவித்த போது யாரும் வெளியேறவில்லை. எனவே, இம்முறையும் அதே போன்று நடக்குமா எனவே, தெரியவில்லை. மேலும், கவின் வெளியேற விரும்பினாலும் கண்டிப்பாக அவரது நண்பர்கள் விடமாட்டார்கள் என்பது உறுதி தான்.

Comments

Popular Posts