கல்லூரிக்குள் மொபையிலா..? சுத்தியலால் உடைத்து எறிந்த கல்லூரி முதல்வர்!

கல்லூரிக்குள் மொபைல் பயன்பாடு, சுத்தியல் கொண்டு உடைத்து எறிந்த கல்லூரி முதல்வர்... எதனால் இந்த கோபம்... வீடியோ உள்ளே..





இன்றைய சூழலில், மொபைல் என்பது அனைவரும் அத்தியாவசியமாகிப் போனது. வீட்டில் இருப்பவர் மொட்டை மாடிக்குத் துணிக் காயப்போடச் சென்றிருந்தாலும், அவரை அவசரமாக அழைக்க ஓடி செல்லும் வழக்கமெல்லாம் ஓய்ந்துபோனது. 'போனடி அவங்களுக்கு' என்ற சொற்களே வெவ்வேறு வார்த்தைகளில் நமது காதுகளில் கேட்கும்.

இதற்கு ஒருப் போனா எனக் கேட்டுக் கொண்டிருந்த நாம், தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிரடி சலுகைகளால் மொபையிலே முழு நேரம் மூழ்கிப் போகிறோம். எனினும் சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக மொபைல் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு தனியாக இருக்கும்போது மட்டும் அதைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.

மொபைல் போனை கல்லூரிக்குள் பயன்படுத்திய மாணவிகள், அதை நிர்வாகத்திடம் பறிகொடுத்த கதைகளைக் கேட்டிருந்திருப்போம். ஆனால் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் நிர்வாகத்தின் உத்தரவை மீறி மொபையில் போன் பயன்படுத்தி வந்த மாணவிகளின் கண்முன்னாலே அவர்களின் போன்களை சுத்தியல் கொண்டு உடைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம் சிரசி சாந்தி நகர் பகுதியில் எம்இஎஸ் சைதன்யா கல்லூரி எனும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மொபைல் போன்கள் பயன்படுத்தக்கூடாது என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தார். எனினு, சிலர் வாட்ஸ் ஆப் போன்ற மெஸஜிங் ஆப்களுக்கள் மூலம் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள தடையை மீறி மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அந்த கல்லூரியின் முதல்வர் பாக்த் ’மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட போன்கள் உடைத்து எறியப்படும்’ என சர்வாதிகார அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் கல்லூரி முழுவதிலும் நேரடியாகச் சென்று நெற்று ஆய்வு நடத்தினார்.

ஆய்வின்போது மாணவ மாணவிகளிடமிருந்து 16 மொபைல் போன்களை பரிமுதல் செய்தார் பாக்த். பரிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்த அனைத்து மாணவர்களையும் ஓர் அறையில் கூடச் செய்தார். கல்லூரி முதல்வர் மொபையில் போன் பயன்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டு போன்களை திருப்பி அளித்துவிடுவார் என அனைவரும் நினைத்து முதல்வர் அறிவுறுத்திய அறையில் மாணவர்கள் கூடினார்கள்.

சற்று நேரத்தில் அங்கு வந்தார் கல்லூரி முதல்வர் பாக்த். அறையில் நுழைந்த பாக்த் அந்த அறையின் மத்தியில் போடப்பட்டிருந்த டேபிள் அருகே, ஒரு சுத்தியலுடன் வந்து நின்றார். அந்த டேபிள் மீது மாணவர்களிடமிருந்து பரிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள் அடுக்கப்பட்டது. ஒரு மைக்கும் அவர் பக்த் கையில் வழங்கப்பட்டது. மைக்கில் ’’மொபைல் போன்கள் பயன்படுத்தினால், அதை உடைத்து எறிவேன் எனக் கூறியிருந்தேன் அல்லவா, அதன்படி இப்போது பிடிபட்ட மொபைல் போன்கள் உடைக்கப்படுகின்றன’’ எனக் கூறிக் கொண்டே மறுக் கையில் சுத்தியல் கொண்டு போன்களை சுக்கு நூறாக உடைத்து எரிந்தார்.


அத்தோடு மட்டும் நிறுத்தவில்லை. இந்த காட்சிகளை முதல்வர் அருகே நின்றவர் வேறோரு மொபைல் போனில் படம்பிடித்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு அந்த கல்லூரி முதல்வர் அறிவுறுத்தலின் பெயரிலே வெளியிடப்பட்டது எனக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ பதிவு இணையத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் அதே வேலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மாணவிகளுக்கு மொபைல் என்பது அத்தியாவசியம் என ஒரு பிரிவினரும், கல்லூரி முதல்வர் செய்தது சரி என்றும் விவாதங்கள் அனல் பறக்கின்றன. இந்த சூழலில், இழந்த மொபைல்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்றும் நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளையும் எழுப்புகின்றனர்.

Comments

Popular Posts