விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!




மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’சங்கத்தமிழன்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் டிரண்ட் ஆகிய நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த டிரைலரை வரவேற்க விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். 


விஜய்சந்தர் இயக்கத்தில் விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்

Comments

Popular Posts